About Us

A Grrand Mahaal A/C தங்களை உள்ளார்ந்த பேரன்போடு வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறது.ஸ்ரீ சக்தி விநாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கும் திருக்கோவில் மண்டபத்தின் மாண்பினைப் பறை சாற்றுகிறது.திருக்கோவிலுக்குப் பின்புறம் 15 ஆண்டுகள் நிறைந்த அரசமரமும் வேம்பும் எழிலுற விளங்குகின்றன. அறம் செழிக்கும் பெரு வாழ்வுக்கு ஆன்றோர் நல்லாசிகளோடு நிகழும் திருமணம் ஆதாரமாகும்.பேரிறைவன் திருவருளோடு திருமணங்கள் இனிதே நடந்தேற உருவானது தான் .


நமது A Grrand Mahaal A/C நடைபெறும் திருமணங்களின் மின்னொளிர் மணி மகுடமாக நடந்தேறியதுதான் தொடக்க நாளன்று மண்ணவரும் விண்ணவரும் போற்ற நடைப்பெற்ற ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கல்யாணம். கடவுளர்களின் திருவுருவம் கலையழகோடு சுற்றுச்சுவர்களில் வரையப்பட்டுள்ளன.நுழைவாயில் பெரிதாகவும் கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது.மண்டபத்தின் மைய அரங்கு குலுமணாலி என அனைவரும் வியக்கும் வண்ணம் முழுமையாகக் குளிரூட்டப்பட்டுள்ளது.
விருந்தினரை மகிழ்வூட்டும் Buffet Hall அழகுற அமைந்துள்ளது. கார்கள் நிறுத்த நல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.திருமண வீட்டாரையும் விருந்தினரையும் அகமும் முகமும் மலர வரவேற்று அன்பான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குகிறோம்.இயற்கை எழில் சூழ்ந்து இனிதே திகழும் இம்மண்டப்பத்துக்கு வருகைதந்து எல்லோரும் மேன்மை பெற வேண்டுகிறோம்.